Published : 15 Sep 2018 08:52 AM
Last Updated : 15 Sep 2018 08:52 AM

உண்மையான காடு

மலைவாழ் மக்களின் தற்காலப் பிரச்சினைகளை, பிரச்சாரமின்றி பேசியிருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுவருகிறது. அந்த வரிசையில், மலை மற்றும் வனப்பகுதியில் வசிக்கும் மக்களையே துணை நடிகர்களாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுப் படத்தையும் தமிழக, கேரள வனப் பகுதிகளில் படமாக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் மங்களேஸ்வரன்.

‘‘அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள படம். காடு, காடு தரும் பொருட்கள்தான் வாழ்க்கை என்று இருக்கும் காணி இன மக்கள், அவர்களது வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. வளர்ச்சி, நகர விரிவாக்கம், நாகரிகம் என்கிற பெயரில் சாலைகள் விரிய விரிய, காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. ‘மரகதக்காடு’ முழுக்க முழுக்க, நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை” என்கிறார் இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x