Published : 05 Sep 2018 06:25 PM
Last Updated : 05 Sep 2018 06:25 PM

சிவகார்த்திகேயன் மகள் பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’: 20 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலின் லிரிக்கல் வீடியோ, 20 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல திறமைகள் கொண்ட சிவகார்த்திகேயன், ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தந்தை - மகளாக நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டராக விரும்பும் மகளுக்கும், அவர் தந்தைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் கதை. சிவகார்த்திகேயனின் கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே வெளியான ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்தவர்.

‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை, ஜிகேபி எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி இருவரும் பாடிய இந்தப் பாடலின் ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ, கடந்த மாதம் 24-ம் தேதி யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல், இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x