Published : 22 Jun 2019 01:23 PM
Last Updated : 22 Jun 2019 01:23 PM

‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்த நாளுக்குக் குவியும் பிரபலங்களின் வாழ்த்து

விஜய்யின் பிறந்த நாளுக்கும், ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்குக்கும் ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 21) ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், தந்தை - மகன் என விஜய் இரு கதாபாத்திரங்களிலும் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் பிறந்த நாளுக்கும், ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்குக்கும் ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

ஹேமங் பதானி: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய். இத்தனை ஆண்டுகள் எங்களை மகிழ்வித்ததுபோல் இனியும் எங்களை மகிழ்விக்கவும். இந்த ஆண்டு பிகிலுடன் உங்களுக்கு ஒரு ப்ளாக் பஸ்டர் ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

 

சிபிராஜ்: எங்கள் இதயங்களைத் தங்கள் திறமையாலும், கடின உழைப்பாலும் மட்டுமல்லாது, எளிமையாலும் ஆட்கொண்ட உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பேரன்பு விஜய் அண்ணா.

 

சிவகார்த்திகேயன்: தளபதி விஜய் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அட்லீ, நயன்தாரா, ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் ஒட்டுமொத்த ‘பிகில்’ குழுவும் மாபெரும் வெற்றி காண வாழ்த்துகள்.

 

இயக்குநர் மோகன் ராஜா: சினிமாத்துறையில் எனது படைப்பாற்றல் மீது மற்றவர்கள் நம்பிக்கை கொள்வதற்கு முன்னதாக நம்பிக்கை கொண்ட இருவர், விஜய் மற்றும் கல்பாத்தி அகோரம். அவர்கள் இருவருமே ஒரே படத்தில் இணைந்துள்ளனர். இருவருக்கும் வெற்றிக்கான வாழ்த்துகள்.

 

இயக்குநர் ரத்னகுமார்: அந்தப் பெயர் இளைய தளபதி. அப்புறம் ஒவ்வொரு முறையும் ஒரு தலைவரைப் போல் எல்லாத்தையும் முன்னெடுத்துச் செல்லும் அட்லீக்கு நன்றி.

 

விஷால்: ‘பிகில்’, இது அற்புதமாக இருக்கிறது.

 

அனிருத்: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார்.

 

விக்னேஷ் சிவன்: எப்போதும் இளமையாகவே இருக்கும் அற்புத நடிகர் விஜய் சாருக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உங்களின் வயது குறைந்து, இளமை திரும்புகிறது. அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி, ஏ.ஆர்.ரஹ்மான் சார், நயன்தாரா, ஆண்டனி ரூபன் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

இயக்குநர் திரு: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். ‘பிகில்’ துவக்கம் பயங்கரம்.

 

தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி: தளபதி விஜய்க்கு ‘மெர்சல்’ பிறந்த நாள் வாழ்த்துகள். ‘பிகில்’ லுக் பயங்கரம். குழுவுக்கு வாழ்த்துகள். அடி மெர்சல் அரசன் வாரான்!

 

அதுல்யா ரவி: எங்களின் ஒரே தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

சூரி: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தளபதி.

 

தனுஷ்: விஜய் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்த்துகள் அட்லீ. ஃபர்ஸ்ட் லுக் திடமாக இருக்கிறது.

 

சிம்ரன்: என்னே ஒரு தோற்றம். பிரமாண்டமாக இருக்கிறது. வாழ்த்துகள்.

 

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்: ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக் அட்டகாசமாக உள்ளது. இரட்டை வேடம் வசீகரிக்கிறது. விளையாட்டை கருவாகக் கொண்ட படம் வெற்றி பெறுவது நிச்சயம். அட்லீக்கு வாழ்த்துகள். விஜய் சார், அர்ச்சனா கல்பாத்தி குழுவுக்கும் வாழ்த்துகள். இந்த தீபாவளி கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. தளபதி விஜய் சார், உலகில் இருக்கும் கோடிக்கணக்கானோருக்கு நல்லதொரு முன்னுதாரணம். அவரது நற்பண்புகளே அதற்குக் காரணம். இந்த ஆண்டு அவருக்கு அற்புதமாக இருக்க வாழ்த்துகள்.

 

ஜி.வி.பிரகாஷ்: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். இந்த ஆண்டு வளமானதாகவும், ஆரோக்கியம் நல்குவதாகவும் இருக்கட்டும்.

 

ராதிகா சரத்குமார்: அன்பு விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். சிறப்பான ஆண்டாக அமையட்டும். எப்போதும் போல் தெறிக்க விடுங்கள்.

 

பார்த்திபன்: 49 நிமிடங்களில்... ‘பிகில்’ போல் வாழ்த்துக்கு நன்றி, என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும், அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத மிஸ்டர் விஜய் வணிகத்தின் உச்சத்தை என்றும் தொடுவார் + தொடர்வார்!

 

சதீஷ்: மெர்சலான தெறி டைட்டில் ‘பிகில்’. தளபதிக்கு வாழ்த்துகள். ரெக்கார்ட் மேக்கர் அண்ட் ரெக்கார்ட் பிரேக்கர் விஜய் சார். அவருடைய சாதனைகளை அவரே முறியடிப்பார். இந்த ஆண்டு சிறப்பானதாக அமையட்டும்.

 

பார்வதி நாயர்: வாவ்... இது இரட்டை ‘தெறி’. இரட்டை ‘மெர்சல்’. அட்லீ, எதிர்பார்ப்புகளைக் கடந்து எப்போதும் போலவே அசத்திவிட்டார். விஜய் சார் மாஸ் லுக். ஒரு வேடத்தில் மாஸ், இன்னொரு வேடத்தில் க்ளாஸ். பக்கா பிறந்த நாள் விருந்து. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.

 

ஒளிப்பதிவாளர் திரு: ஃபர்ஸ்ட் லுக் மாஸ். வாழ்த்துகள் அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் குழுவினர். தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு அமைதியை நல்கட்டும்.

 

தயாநிதி அழகிரி: ப்ப்பா... வேற... வேற... வேற லெவல்!  ஃபர்ஸ்ட் லுக்கில் என்னே ஒரு உத்வேகம். தளபதி விஜய் எப்போதும் போல் அசத்துகிறார். இந்தப் படம் உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றி காணப்போகிறது. சிவ சந்திரிகாவுக்காக மகிழ்கிறேன். அட்லீ உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.

 

அலிஷா அப்துல்லா: ஒரே படத்தில் க்ளாஸ், மாஸ். பைக் ரேஸ் படமொன்றில் உங்களுடன் பணிபுரியக் காத்திருக்கிறேன் சார். அந்தப் படம் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

 

வரலட்சுமி சரத்குமார்: விஜய் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு இன்னும் இன்னும் அதிகமாக நீங்கள் எங்களைத் திரையில் குதூகலியுங்கள். ஃபர்ஸ்ட் லுக்கை நேசிக்கிறேன். குட் லக் சார். இந்த ஆண்டு ரசிகர்கள் உங்களைக் கொண்டாடும் ஆண்டாக அமையட்டும்.

 

விக்ரம் பிரபு: ‘பிகில்’ குழுவுக்கு வாழ்த்துகள். பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். நீங்கள் மக்களை மகிழ்விப்பதோடு, திரையில் அசத்தலாக நடிக்கிறீர்கள்.

 

ராகவா லாரன்ஸ்: நண்பா... ‘பிகில்’ இரண்டு லுக், வேற லெவல். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற ராகவேந்திர சுவாமிகளைப் பிரார்த்திக்கிறேன். ஒட்டுமொத்தக் குழுவுக்கும் வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா விஜய். நலமும் வளமும் கிட்ட ராகவேந்திரரிடம் பிரார்த்திக்கிறேன்.

 

இயக்குநர் கோனா வெங்கட்: மாஸ் காட்டுவதில் தந்தை. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய். அட்லீக்கும் குழுவுக்கும் வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x