Last Updated : 04 May, 2019 03:21 PM

 

Published : 04 May 2019 03:21 PM
Last Updated : 04 May 2019 03:21 PM

உதவி இயக்குநர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கோமாளி படக்குழு

உதவி இயக்குநர்களின் பெயர்களையும் போஸ்டரில் போட்டு, அவர்களுக்கு மரியாதை செய்துள்ளது 'கோமாளி' படக்குழு.

'அடங்க மறு' படத்தைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜெயம் ரவி. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர்.

'கோமாளி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, படத்தின் லோகோ வடிவமைப்பை நேற்று (மே 3) வெளியிட்டது படக்குழு. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட் ஸ்டார் ஆகியவை கைப்பற்றியுள்ளன.

இப்படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவரது பெயரையும், படத்தின் போஸ்டரிலேயே போட்டு பெருமைப்படுத்தியுள்ளது படக்குழு. இதனை, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உதவி இயக்குநர்களின் பெயர் போஸ்டரில் இடம்பெறுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இதர படங்களில் உதவி இயக்குநர்களின் பெயர்கள், படத்தின் டைட்டில் கார்ட்டில் மட்டுமே இடம்பெறும். போஸ்டரில் முதல்நிலை உதவி இயக்குநரின் பெயர் மட்டும் இடம்பெறும். ஆனால், 'கோமாளி' படத்தில் உதவி இயக்குநர்கள் அனைவரது பெயரையும் போட்டுள்ளனர்.

இந்த முயற்சி நிஜத்தில் பாராட்டுக்குரியது. 'கோமாளி' படக்குழுவினரின் இந்தப் புது முயற்சியை, இதர படக்குழுவினரும் பின்பற்றுவார்களா என்பது வரும் காலத்தில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x