Published : 26 Apr 2019 09:00 AM
Last Updated : 26 Apr 2019 09:00 AM

அனிருத் இசையில் ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் சீசன் 6 நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ‘சூப்பர் சிங்கர்’ சீனியர் சீசன் 7 ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. இந்த சீசனில், கூடுதல்  கவனம் ஈர்க்கும் விதமாக இசையமைப்பாளர் அனிருத்தும் இணைகிறார். நிகழ்ச்சியின் முக்கிய அத்தியாயங்களில் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதோடு, தான் கடந்துவந்த பாதை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறார். 

வயது வித்தியாசமின்றி, இசை ஆர்வமும், ஞானமும் உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பென்னி தயாள், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த சீசனின் இறுதிச்சுற்றில் வெற்றிபெறும் வெற்றியாளர், இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல் பாடும் வாய்ப்பும் காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x