Published : 22 Apr 2019 02:00 PM
Last Updated : 22 Apr 2019 02:00 PM

விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘லாபம்’: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது.

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். ‘புறம்போக்கு’ படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடித்தார். இந்நிலையில், விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ‘லாபம்’ என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7சிஎஸ் என்டெர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ராஜபாளையத்தில் பூஜையோடு இன்று (ஏப்ரல் 22) தொடங்கியது.

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’, அடுத்த மாதம் (மே) 16-ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x