Last Updated : 20 Apr, 2019 02:40 PM

 

Published : 20 Apr 2019 02:40 PM
Last Updated : 20 Apr 2019 02:40 PM

மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன் Vs விஜய் சேதுபதி

தமிழக விநியோகக் களத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த படங்கள் மோதவுள்ளன.

ரஜினி - கமல், விஜய் - அஜித், சூர்யா - விக்ரம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் எங்கள் நாயகன்தான் வசூலில் நம்பர் ஒன் என்று போட்டியிடுவார்கள். இந்த வரிசையில் இணைந்துள்ளார்கள் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி.

2016-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'றெக்கை' ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியானது. இதில் 'றெக்கை' திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இருவருமே பல பேட்டிகளில் எங்களை ஒப்பிட வேண்டாம் என்று தெரிவித்தாலும், இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தற்போது மே 16-ம் தேதி அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சிந்துபாத்' வெளியாகவுள்ளது. அதே போல் மே 17-ம் தேதி ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' வெளியாகவுள்ளது.

இரண்டுமே பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருப்பதால், எந்தப் படம் வரவேற்பைப் பெறும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படத்தின் வசூல் தான் அதிகமாக இருக்கும் என்றாலும், எது வெற்றி என்பதே இப்போதைய கேள்விக்குறி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x