Last Updated : 14 Apr, 2019 12:03 PM

 

Published : 14 Apr 2019 12:03 PM
Last Updated : 14 Apr 2019 12:03 PM

தளபதி 63 அப்டேட்: கால்பந்து அணி கேப்டனாக நடிக்கும் இந்துஜா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தில் கால்பந்து அணி கேப்டனாக நடித்து வருகிறார் இந்துஜா.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான கால்பந்து விளையாட்டு அரங்கம் அமைத்து வருகிறது படக்குழு. இதில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

இப்படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார் விஜய். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு பயிற்சிகள் எடுத்து, நடித்து வருவதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ. விஜய் படத்தின் பணிகளுக்கு இடையே, ஷாருக்கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் அட்லீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x