Published : 31 Mar 2019 07:57 AM
Last Updated : 31 Mar 2019 07:57 AM

வில்லன் ஆன தயாரிப்பாளர்!

ஃபைனான்ஸ்  சிக்கலால், ரிலீஸ் தினத்தன்று திரையரங்குகளில் முதல் காட்சி திரையிட முடியாமால் சர்ச்சையை சந்தித்தது ‘96’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அப்போது கிட்டத்திட்ட வில்லனாகவே சித்தரிக்கப்பட்டார். ஆனால் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  எதிர்பாராத திருப்பமாக தற்போது நந்தகோபால் சினிமாவில் வில்லனான நடித்து முடித்திருக்கிறார். ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நவீன் எழுதி, இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் அவரது இரண்டாவது படமான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில்தான் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். கயல் ஆனந்தி நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் புரமோ பாடலை யுகபாரதி எழுத, அதை அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’ பட இசையமைப்பாளர் பாலபாரதி பாகவதர் ஸ்டைலில் பாடி அசத்தியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x