Published : 01 Feb 2019 11:00 AM
Last Updated : 01 Feb 2019 11:00 AM

பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது ராஜேஷ் - சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து படமாக்கி வருகிறார்கள்.

நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், படக்குழுவினர் 'Mr.லோக்கல்' என்ற தலைப்பை பரிசீலனையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஆலோசனை நடத்தியது படக்குழு. ஆனால், அதற்கு முன்னதாகவே பிப்ரவரி 2-ம் தேதியே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ராஜேஷ் படத்துக்குப் பிறகு, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x