Published : 26 Feb 2019 07:19 PM
Last Updated : 26 Feb 2019 07:19 PM
தீபாவளி வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான தகவலுக்கு 'தளபதி 63' படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'தளபதி 63' என்று அழைத்து வருகிறது படக்குழு. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை அட்லீ திட்டமிட்ட படப்பிடிப்பு அனைத்துமே, அவர் எதிர்பார்த்ததுக்கு முன்பாகவே முடிந்துவிட்டது. ஆகையால், ஆகஸ்ட் மாதமே ‘தளபதி 63’ திரைக்கு வர வாய்ப்பு என்று செய்திகள் வெளியாகின. இதனால், விஜய் ரசிகர்களும் பெரும் சந்தோஷமடைந்தனர்.
இச்செய்தியைக் குறிப்பிட்டு, ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது உண்மையல்ல" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீபாவளி வெளியீடுதான், அதில் மாற்றமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு, கலை இயக்குநராக முத்துராஜ் பணிபுரிந்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT