Last Updated : 24 Feb, 2019 07:16 PM

 

Published : 24 Feb 2019 07:16 PM
Last Updated : 24 Feb 2019 07:16 PM

ஜெ. பிறந்த நாள்: த அயர்ன் லேடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் ப்ரியதர்ஷினி தான் இயக்கவுள்ள 'த அயர்ன் லேடி' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.

அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சி பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.

இதில் முதல் ஆளாக, தன் ஜெயலலிதா பயோபிக்கை அறிவித்தவர் இயக்குநர் ப்ரியதர்ஷினி. இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'த அயர்ன் லேடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஆயுத்தமாகி வந்தது படக்குழு. இன்று (பிப்.24) ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, 'த அயர்ன் லேடி' படத்தின் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படம், அடுத்தாண்டு இதே தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்தில் நித்யா மேனனுடன் பல  முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் குறித்து பிரியதர்ஷினி, ''இந்தப்படம் இளம் நடிகையாக ஜெ. தனது வாழ்க்கையைத் தொடங்கியதில் இருந்து, மருத்துவமனையில் இருந்த கடைசி நாட்கள் வரை பேசும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x