Published : 01 Feb 2019 11:00 AM
Last Updated : 01 Feb 2019 11:00 AM

பிப்.22-ம் தேதி வெளியாகிறது கண்ணே கலைமானே

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். வசுந்தரா கஷ்யப், வடிவுக்கரசி, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில், அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து, தணிக்கையிலும் 'யு' சான்றிதழ் கிடைத்தது. பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், பிப்ரவரி 1-ல் 5 படங்கள் வெளியாவதால், தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்தது.

தற்போது பிப்ரவரி 22-ம் தேதி 'கண்ணே கலைமானே' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் விஜய்சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்தை இயக்கி வருகிறார் சீனுராமசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x