Last Updated : 24 Jan, 2019 12:28 PM

 

Published : 24 Jan 2019 12:28 PM
Last Updated : 24 Jan 2019 12:28 PM

ரசிகரின் எதிர்ப்பு: சிம்பு பாணியில் ஆர்.ஜே.பாலாஜியின் பதிலடி

'எல்.கே.ஜி' போஸ்டர் வெளியீட்டுக்கு வந்த எதிர்ப்புக்கு, சிம்பு பாணியில் ஆர்.ஜே.பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் 'எல்.கே.ஜி'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. பொங்கல் வெளியீடாக இருந்த இப்படம் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தை பிரபு இயக்கியுள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் நடித்துள்ளனர். பிப்ரவரி வெளியீடு என்பதால் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. முதலாவதாக குடியரசு தினத்தன்று முதல் பாடலை வெளியிடவுள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.

சமீபகால அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்பதால், போஸ்டரையும் அவ்வாறே வடிவமைத்துள்ளது படக்குழு. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இருவரும் கையில் செங்கோல் வைத்திருப்பது போன்றே, ஆர்.ஜே.பாலாஜி - ப்ரியா ஆனந்த் இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள்.

இந்தப் போஸ்டருக்கு அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர் "படம் ரீலீஸ் அகட்டும். உன் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணிடுறேன்" என்று பதிலளித்தார். அவருக்குப் பதிலடியாக "இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம மாஸ் காமிங்க...!" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கான ரசிகர் சர்ச்சையில் சிம்பு வெளியிட்ட வீடியோ பதிவில் "கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார். அவரைப் போலவே ஆர்.ஜே.பாலாஜியும் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x