Published : 22 Jan 2019 12:15 PM
Last Updated : 22 Jan 2019 12:15 PM

அசுரன் அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் மஞ்சு வாரியர்

வெற்றிமாறன் இயக்கவுள்ள 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு நாயகியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'வடசென்னை' படத்தைத் தொடர்ந்து, அப்படத்தின் 2-ம் பாகத்துக்கு முன்பாக வேறொரு படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணையவுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதனை வெற்றிமாறனும் உறுதிப்படுத்தினார்.

'அசுரன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள அப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் கெட்-அப்புக்காக முடியை எல்லாம் வெட்டி தயாரானார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஜனவரி 26-ம் தேதி தொடங்கவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக 'அசுரன்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகி விட்டது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அதேபோல், வெற்றிமாறன் - ஜீ.வி.பிரகாஷ் கூட்டணிக்கும் இது நான்காவது படம். ஜீ.வி. இசையமைக்கும் 71-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x