Published : 10 Jan 2019 08:59 AM
Last Updated : 10 Jan 2019 08:59 AM

தமன்னாவின் நடன ஆர்வம்

தமிழ், தெலுங்கு இந்தியில் மிகவும் பிஸியாக இருக்கிறார் நடிகை தமன்னா. இதற்கிடையில், சில படங்களில் ஒரு பாடலுக்கு முகம் காட்டுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘சினிமாவில் எனது ஆரம்ப நாட்களில், நான் ஓரளவு கவனம் பெற்றதற்கு காரணமே என் நடனம்தான். தவிர, கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் தங்களது நடனத் திறமையைக் காட்ட இப்போதெல்லாம் மிக அரிதாகவே வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், சிறப்பு பாடலுக்கு நடனமாடுவது என்றால், அதில் நான் மட்டுமே பிரதானமாக இருப்பேன். என் நடனத் திறமையை வெளிப்படுத்தவும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார் தமன்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x