Last Updated : 19 Dec, 2018 12:08 PM

 

Published : 19 Dec 2018 12:08 PM
Last Updated : 19 Dec 2018 12:08 PM

நூறு விஜய் சேதுபதி வேணும்: போஸ் வெங்கட் நெகிழ்ச்சி

கஜா புயலில் பாதிக்கப்பட்டவங்களுக்கு சத்தமே இல்லாம விஜய் சேதுபதி உதவிகள் செஞ்சிட்டிருக்கார். அவர் மாதிரி நூறு விஜய் சேதுபதி கைகொடுத்தா, விவசாயிகள் பழைய நிலைக்கு வந்துருவாங்க என்று போஸ் வெங்கட் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடிகர் போஸ் வெங்கட் கூறியதாவது:

''எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. கஜா புயல் அடிச்ச மறுநாள், ஊர்லேருந்து அண்ணன் போன் பண்ணினாரு. எல்லாம் போச்சுடான்னு சொல்லி கதறி அழுதாரு. ஊர் நிலவரம் மொத்தத்தையும் சொன்னாரு. மெழுகுவர்த்தி, லைட்ஸ், மற்ற பொருட்கள்னு வாங்கிட்டுப் போய் கொடுத்தோம். ஊர்ல, கராத்தே அசோஸியேஷன் நண்பர்கள் சேர்ந்து எங்களால முடிஞ்சதைச் செஞ்சோம்.

விஜய் சேதுபதி நல்ல நண்பர் எனக்கு. அவர் அப்போ வெளிநாட்ல இருந்தார். அவரோட நண்பர் ராஜேஷ்கிட்ட விவரம் சொன்னேன். உடனே லைன்ல வந்தார் விஜய் சேதுபதி. ‘என்ன பாஸ் சொல்றீங்க, சாதாரண புயல்தானேன்னு நெனைச்சேன்’ன்னு சொன்னார். கொஞ்ச நேரத்துல, கஜா புயலுக்கு 25 லட்சம் ரூபாய்னு அறிவிச்சிருந்தார்.

அதேபோல நடிகர் கார்த்திகிட்ட பேசினேன். ‘இப்பதான் 50 லட்சம்னு சொல்லியிருக்கோம். வேற என்ன வேணும்’னு கேட்டார். கேட்டா பொருட்களையெல்லாம் அனுப்பிவைச்சார்.

அப்பாவும் என் நண்பனும் சொன்னதுதான் மனசுல அப்படியே நிக்குது. ‘எழுபதுல வந்த புயலின் போது எல்லாமே போச்சு. உன் தாத்தா, பாட்டியோட போட்டோலாம் கூட போயிருச்சு’ன்னு சொன்னார். அதேபோல என் நண்பர், அப்போ வந்த புயலால, வெளியூர்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். இன்னமும் வெளியூர்லதான் வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன்’னு சொன்னார்.

ஒரு முதலாளியை கூலித்தொழிலாளியா அந்தப் புயல் மாத்தினது போலவே, இப்ப வந்த கஜா புயலும் சுக்குநூறாக்கிப் போட்ருச்சு. அந்த மக்களுக்கு, விவசாயிகளுக்கு, நாம கொடுக்கிற பொருளெல்லாம் சின்னச் சின்ன தேவைகள்தான். அதுக்குத்தான் கொடுத்துக்கிட்டிருக்கோம்.

அவங்க நிலங்களையும் தோப்புகளையும் விழுந்து கிடக்கற மரங்களையும் அப்புறப்படுத்தணும். அடுத்தாப்ல, மரக்கன்று நட்டுத் தரணும். இதெல்லாம் பணக்காரங்கதான் செய்ய முடியும்.

நாலரை ஏக்கர்ல விழுந்த மரங்களையெல்லாம் அப்புறப்படுத்தி, அந்த நாலரை ஏக்கர்ல, மரக்கன்று நட்டுத்தருவதை சத்தமே இல்லாம விஜய் சேதுபதி செஞ்சிட்டிருக்கார். அந்தப் பொறுப்பை, விஜய் சேதுபதி எங்கிட்ட கொடுத்திருக்கார்.

விஜய் சேதுபதி இன்னும் நாலு தோப்புகளை எடுக்கமுடியும். ஆனா, விஜய் சேதுபதி மாதிரி, நூறு விஜய் சேதுபதி முன்வரணும். ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச நிலங்களை சுத்தப்படுத்தி, புது மரக்கன்று நட்டுத்தந்தா, இந்த லட்சாதிபதிகளெல்லாம் திரும்பவும் லட்சாதிபதிகளா ஆயிருவாங்க. கூலித்தொழிலாளர்களாவதை தடுத்துடலாம். விஜய் சேதுபதி மாதிரி அதுக்கு உதவி செய்ய வரணும்''.

இவ்வாறு விஜய் சேதுபதி குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் போஸ் வெங்கட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x