Published : 18 Dec 2018 04:32 PM
Last Updated : 18 Dec 2018 04:32 PM
புகழ்மிக்க இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய திரைப்படம். அவரது படங்களுக்கு உண்டான புதுமையும் அதிர்ச்சியும்மிக்க ஒரு வினோதமான கதை இதிலும் உண்டு. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் கப்பலில் பலதரப்பட்ட மக்கள் உல்லாச சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அது நினைத்ததுபோல் உல்லாசமானதாக இல்லை. மனித உள்ளங்களின் மிக கொடிய உள்ளுணர்வுகளால் அது வழிதவறும் பயணமாகிறது. இப்பயணம் மானுடத்தின் ஊழல் நிறைந்த கட்டமைப்பில் இருந்து விலகுகிறது.
படத்தின் ட்ரெய்லர்
தான் மகிழ்ச்சியற்று இருப்பதுதான் தனது மகிழ்ச்சியே என்று உணரும் ஒரு விசித்திர குணாம்சம் கொண்ட மனிதனின் கதை இது. துயரத்துக்கு அடிமையானவர் இந்த கதாபாத்திரம் தன் மீது பிறர் இரக்கப்பட வேண்டும், பரிதாபப்பட வேண்டும் என்பதற்காகவே பல வேலைகளைச் செய்யக் கூடியவர். கொடூரமல்லாத ஒரு உலகத்தில் கொடூரங்களையும் துயரத்தையும் பரிதாபத்தையும் விரும்பும் ஒரு விசித்திர மனிதனின் கதை இது.
சீனாவின் பெண் திரைப்பட இயக்குநர் ஒருவர் ஹாங்காங்கிற்கு நாடு கடத்தப்படுகிறார். அவர் நாடு கடத்தப்படுவதற்கான காரணம் அவர் மீது சுமத்தப்பட்ட அரசியல் சதியில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டு. அவரது திரைப்படம் தடை செய்யப்படுகிறது. அந்த பெண் இயக்குநர் தைவான் செல்லும் வழியில் தனது தாயுடன் மீண்டும் இணைகிறாள். இப்பயணம் இயக்குநருக்கு ஒரு குடும்பப் பயணமாக அமைகிறது. இயக்குநர் லியாங் யீங் பெற்ற உண்மை அனுபவமே திரைப்படமாகியுள்ளது.
படத்தின் ட்ரெய்லர்
ஒரு படைப்பாளியும், அவள் உருவாக்கிய கதாபாத்திரங்களும் பாலியல் ஈடுபாட்டைப் பற்றி அலசும் படம் இது. புத்திசாலித்தனமும், சொல்ல வந்த விஷயத்தில் ஒரு தெளிவும் இருப்பதால் இப்படம் பலரது பாராட்டைப் பெற்றது. நிர்வாணம் மட்டும் தான் காமமெனக் கொள்ளாமல், அகக் கிளர்ச்சியை, உணர்வின் ஆதியைத் தேடிச் செல்கிறது 'டச் மீ நாட்'. நாம் போதிக்கப்பட்ட காமம் தான் காமமா? தீண்டும் இன்பம் மட்டும் நிறைவைத் தருமா? காமத்தின் ஊற்று உடலா? மனமா? விடை தேடும் படம் இது. காட்சிப்படுத்திய விதத்திலும், படத்தொகுப்பின் நேர்த்தியிலும் நேர்த்தி காட்டி, இப்படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் Adina Pintilie.
படத்தின் ட்ரெய்லர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT