Published : 17 Dec 2018 08:17 AM
Last Updated : 17 Dec 2018 08:17 AM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.17 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | ENTRANCED EARTH / TERRA EM TRANSE  | DIR: GLAUBER ROCHA  | BRAZIL | 1967 | 111'

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலம் எல்டோரடோ. இங்கு அரசியல் அதிகாரத்துக்காக உள்ளுக்குள்ளேயே பெரும் சண்டை நடக்கிறது. இது சமூகத்தில் வெறுப்பை உருவாக்கிய நேரத்தில், உழைத்தே ஓய்ந்துபோன பத்திரிகையாளர் பாலோ மார்ட்டின்ஸ், சம அளவில் ஊழலில் ஊறிப்போன வேட்பாளர்கள் இருவரையும் எதிர்க்கிறார். பணக்காரக் கூட்டத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் பாலோவின் நிலை என்னவாகும்..? கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படம்.

பகல் 1.00 மணி | VOLCANO / VULKAN | DIR: ROMAN BONDARCHUK  | UKRAINE | 2018 | 106'

லூகாஸ், இவர் ராணுவத்துக்கு மொழிபெயர்ப்பாளராக இருப்பவர். ஒரு பயணத்தின் போது தெற்கு உக்ரைனின் ஒரு சிறு ஊரில் சிக்கிக் கொள்கிறார். விசித்திர ஊரில் விசித்திரமான மனிதராக லூகாஸ். இங்கு துரதிர்ஷ்டவசமான பல நிகழ்வுகளுக்குள் வீழ்கிறார் லூகாஸ். கதை ஒரு டார்க் ஹியூமர் பாணியில் செல்லும், காட்சிகள் ஆழ்மன எதார்த்தச் சித்தரிப்புகளாக சர்ரியல் வண்ணம் கொள்கிறது. கடுமையான சிறை உள்ளிட்ட அனுபவங்களுக்குப் பிறகு ஒரு வீட்டில் அடைக்கலமாகிறார். அங்கு வோவோ என்பவரும் அவரது மயக்கும் மகள் மருஷ்கா ஆகியோர் உள்ளனர். கதைப்போக்கு குறுக்குமறுக்காகச் செல்லும், நேர்கோட்டு திரைவாசகனுக்கு இந்தப் படம் வேறொரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

பிற்பகல் 3.30 மணி | CRACKERJACK | DIR: PAUL MOLONEY | AUSTRALIA | 2002 | 92'

'லான் பவுல்ஸ்' எனப்படும் விசாலமான புல்வெளி மைதானங்களில் வீசி ஆடப்படும் பந்து விளையாட்டைப் பற்றிய திரைப்படம். ஜாக் சிம்ஸன் எனும் இளைஞன் புல்வெளி பந்தாட்ட கிளப்பில் இணைகிறான். அவன் இணைகிற நேரம் அந்த கிளப்பில் சில பிரச்சிகனைகள் எழுகிறது. அவன் நிறைய தோல்விகளை சந்திக்கிறான். அதனால் வேலையிழப்பு, காதலி விலகல் என தொடர் தோல்விகள்... கிளப்பில் வெற்றிபெற வேண்டிய நுட்பங்களை உணர்ந்து மீண்டும் எப்படி வெற்றிபெறுகிறான் என்பதை நகைச்சுவை ததும்ப கூறியுள்ளார் இயக்குநர் பால் மொலானி. இதில் மிக் மொலாயின் நடிப்புதான் இப்படத்தில் நகைச்சுவையை அள்ளித்தரும் பிரதான பாத்திரம்.

மாலை 5.30 மணி | AMIN | DIR: PHILIPPE FAUCON | FRANCE | 2018 | 91'

செனகல் நாட்டைச் சேர்ந்த அமீன், பிழைப்புக்காக பிரான்ஸ் நாட்டுக்கு வேலைக்கு வருகிறார். அமீனுக்கு ஆயிஷா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பாரி்ஸ் நகரின் புறகநகரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் அமீன் தன்னுடைய சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை செனகல் நாட்டில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்புகிறார். ஒருநாள் பாரிஸ் நகரில் ஒரு செவிலியர் வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் அமீன், அவருடன் தொடர்பு ஏற்படுகிறது. அதன்பின் அமீன் வாழ்க்கை என்ன ஆனது என்பதை கதை விவரிக்கிறது. கேன்ஸ் திரைவிழாவில் டைரக்டர்ஸ் ஃபார்ட்நைட் பிரிவில் திரையிடப்பட்ட படம்.

மாலை 7.30 மணி | A TWELVE YEAR NIGHT / La noche de 12 años  | DIR: ALVARO BRECHNER | URUGUAY | 2018 | 122'

இலையுதிர் காலத்தில் ஒரு இரவு. மூன்று அரசியல் கைதிகள் அவர்கள் சிறை அறையிலிருந்து, ராணுவத்தின் ரகசிய பரிசோதனைக்காக மாற்றப்படுகின்றனர். இந்த மூவரும், தனித்தனியாக, ஒரு சிறிய இருண்ட அறைகளில் அடுத்த 12 வருடங்களைக் கழிக்கப்போகின்றனர். இந்த மூவரில் ஒருவர் எதிர்காலத்தில் உருகுவேவின் அதிபராக உருவாகவுள்ள பேப் முஜிகா. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x