Published : 12 Dec 2018 12:10 PM
Last Updated : 12 Dec 2018 12:10 PM

அட்டூழியம் அல்ல ... பசி: சமூக வலைதளத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு எதிரான விமர்சனங்களுக்கு விக்னேஷ் சிவன் பதில்

தனியாரைச் சேர்ந்த உணவு ஆர்டர் செய்யும் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அவரது தவறை சுட்டிக்காட்டியதற்கு எதிராக  சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இத்தகைய விமர்சனங்களைத் தவிருங்கள் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

உணவுகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து இல்லத்தில் உண்பது சமீபகாலத்தில் நகரங்களில் பெருகி வருகிறது. இதன் காரணமாக  உணவை ஆன்லைன்  மூலம் ஆர்டர் செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஆன்லைன் உணவு  ஆர்டர் செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய உணவைக் கொஞ்சம் தான் சாப்பிட்டு மீண்டும் அதை பேக் செய்து அதனை அர்டர் பையில் வைத்துவிட்டர். இதனை வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட, இது வைரலானது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரையும் அந்த நிறுவனத்தையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு சிலர் அட்டூழியம் என்று தலைப்பிட்டனர்.

இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ”பொறுமையை மறக்கடித்த பசியின் கொடுமை ... பாவம் அவரை மன்னியுங்கள்... மறந்து விடுங்கள்...அட்டூழியம் அல்ல ... பசி ” என்று பதிவிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x