Published : 29 Oct 2018 06:22 PM
Last Updated : 29 Oct 2018 06:22 PM

#மீடூ எதிரொலி: சபாக்கள் கூட்டமைப்பு சார்பில் விசாகா கமிட்டி அமைப்பு

இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் முன்வைக்கப்படும் பாலியல் புகார்களை விசாரிக்க, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க  நகர சபாக்கள் கூட்டமைப்பு சார்பில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணைத் தலைவராகக் கொண்டுள்ள இந்தக் கமிட்டியில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பர். வருங்காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டியில் வழக்கறிஞர் உமா ராமநாதன், கர்நாடகப் பாடகி சுதா ரகுநாதன், டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் மரபு நெறிபாடுகள் துறையில் நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட உஷா தினேஷ், மருத்துவ நிபுணர் விவேக் ஆனந்த் மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த தாரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கமிட்டியின் ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறைகளில் நடக்கும், துறை சார்ந்தவர்கள் அளிக்கும் புகார்களை icc@citysabhas.org என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

பெண்கள் தங்களின் பணி இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை வெளிக்கொணர மீ டூ இயக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவளித்த இசை அகாடமி, கடந்த வாரம் பாலியல் புகார்களுக்கு உள்ளான 7 பாடகர்களின் கச்சேரிகளை இந்த சீசனில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x