Published : 04 Oct 2018 07:02 PM
Last Updated : 04 Oct 2018 07:02 PM

ரஜினியின் ‘பேட்ட’ செகண்ட் லுக் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். தற்போது நடிகரும், இயக்குநருமான சசிகுமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி. மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x