Published : 02 Aug 2018 07:59 PM
Last Updated : 02 Aug 2018 07:59 PM

சினிமாவில் 26 வருடங்கள்: அஜித்தை வாழ்த்திய விவேக் ஓபராய்

அஜித் சினிமாவுக்கு வந்து 26 வருடங்கள் ஆகிவிட்டதால், ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய்.

செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்தப் படம் வெளியானது. அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அக்ரிமென்ட்டில் அஜித் கையெழுத்திட்ட நாள் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி. அஜித் கையெழுத்திட்டு நாளையுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் பல்வேறு ட்வீட்டுகளைப் பதிந்து வருகின்றன.

இந்நிலையில், பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய், “26 வருடங்கள் என்னுடைய நண்பா, லெஜண்டாக மிகச்சிறந்த வளர்ச்சி. லவ் யூ பிரதர். பல்வேறு மறக்க முடியாத செயல்கள் மூலம் எங்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறாய் என்று நிச்சயமாகக் கூறமுடியும். எனக்கு ‘விசுவாசம்’ இருக்கா” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x