Published : 16 Aug 2018 10:49 AM
Last Updated : 16 Aug 2018 10:49 AM

படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: விஜய் இயக்குகிறார்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். இதனை விஜய் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'83 world cup', 'என்டிஆர்' சுயசரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் புதிதாக தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமாகும்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது படக்குழு. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான விஜய் இயக்கவுள்ளார்.

இதில் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பவர் யார் என்பது முடிவாகவில்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

தென்னிந்திய நடிகர்களுடன், பிரபல பாலிவுட் நடிகர்களையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போதே சமூக வலைதளத்தில் ஜெயலலிதாவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நாயகிகளின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x