Last Updated : 07 Aug, 2018 06:18 PM

 

Published : 07 Aug 2018 06:18 PM
Last Updated : 07 Aug 2018 06:18 PM

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்: சினிமா நிகழ்ச்சிகள், திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதைத் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் கடந்த 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கடுமையாகப் பாதித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7)  அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியானதை அடுத்து தொண்டர்கள் கதறி அழுதனர். மேலும், இன்று (ஆகஸ்ட் 7) மற்றும் நாளை (ஆகஸ்ட் 8) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறுவதாக இருந்த அனைத்து சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது, பல சினிமா திரையரங்குகளில் மாலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மாலைக்கு மேல் நடைபெற்று வந்த பல படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு சினிமா திரையரங்குகளில் நாளை (ஆகஸ்ட் 8) மாலை வரை அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x