Published : 14 Aug 2018 08:37 PM
Last Updated : 14 Aug 2018 08:37 PM

விஜய் சேதுபதியின் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’: வரும் 24-ம் தேதி ரிலீஸ்

விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ வருகிற 24-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தயாரித்த விஜய் சேதுபதி, அடுத்ததாகத் தயாரிக்கத் தொடங்கிய படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. லெனின் பாரதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, மார்ச் மாதமே முடிவடைந்தது. உடனடியாகப் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து, சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ள இந்தப் படம், வருகிற 24-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸின் மூன்றாவது படமான ‘ஜுங்கா’, கடந்த மாதம் (ஜூலை) 27-ம் தேதி ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x