Published : 19 Aug 2018 11:20 AM
Last Updated : 19 Aug 2018 11:20 AM

காமெடி திரில்லரான ‘சூப்பர் டூப்பர்’

காமெடி கலந்த பொழுதுபோக்கு மற்றும் திரில்லர் பின்னணியுடன் ‘சூப்பர் டூப்பர்’ என்ற திரைப்படம் உருவாகிறது. ‘ஆண்மை தவறேல்’ பட நாயகன் துருவா, ‘மேயாத மான்’, ‘மெர்குரி’, ’60 வயது மாநிறம்’ ஆகிய படங்களின் நாயகி இந்துஜா நடிப்பில் உருவாகும் இப்படத்தை அருண் கார்த்திக் இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் அருண் கார்த்திக் கூறியபோது, ‘‘இது வழக்கமான கதை இல்லை. அதனால்தான் நாயகன், நாயகி இருவருமே நடிக்க ஒப்புக்கொண்டனர். நாயகி இந்துஜா இப்படத்தில் கல்லூரி மாணவி. அவரை காதலிக்க முயற்சிக்கும் நாயகனுக்கு என்னமாதிரி சிக்கல் எழுகிறது? அந்த சிக்கலை நாயகி எப்படி உருவாக்குகிறார்? இருவருக்குமான அந்த மோதல் எப்படி ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ரகளையான ஒரு கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி, 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு களமிறங்கி உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x