Last Updated : 30 Jul, 2018 06:27 PM

 

Published : 30 Jul 2018 06:27 PM
Last Updated : 30 Jul 2018 06:27 PM

தமிழில் ரீமேக்காகிறது ‘அத்தாரிண்டிகி தாரேதி’

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

4 நந்தி விருதுகள் உட்படப் பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றிக் கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

தற்போது இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது லைகா நிறுவனம். இதில் பவன் கல்யாண் கதாபாத்திரத்தில் யார், இயக்குநர் யார் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

இதனிடையே சமூகவலைத்தளத்தில் அஜித் அல்லது விஜய் இருவரில் ஒருவர் பவன்கல்யாண் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x