Published : 24 Jul 2018 11:55 AM
Last Updated : 24 Jul 2018 11:55 AM
ஈரானை மிரட்டும் தொனியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவை நடிகர் சித்தார்த் கிண்டல் செய்துள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
ட்ரம்ப் - ஹசன் ரவ்ஹானி ஆகியோருக்கு இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம். இல்லையேல் வரலாற்றில் இதற்கு முன் ஈரான் அனுபவிக்காத துன்பத்தை அனுபவிக்க நேரிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை ட்ரம்ப் ஆங்கிலத்தின் பெரிய எழுத்துகளைப் பயன்படுத்தி பதிவிட்டிருந்தார். ( உதாரணத்துக்கு NEVER, EVER THREATEN THE UNITED STATES AGAIN....)
இந்த நிலையில் ட்ரம்ப்பின் ட்வீட்டைக் குறிப்பிட்டு நடிகர் சித்தார்த், ”உங்களுடைய கேப்ஸ் லாக் ஆன்னில் உள்ளது” என்று கிண்டல் தொனியில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பருவ நிலை ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டைக் குறிப்பிட்டு சித்தார்த் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT