Published : 11 Jul 2018 01:37 PM
Last Updated : 11 Jul 2018 01:37 PM

விஷ்ணு விஷால் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் க்ரிஷ்

பின்னணிப் பாடகர் மற்றும் நடிகரான க்ரிஷ், விஷ்ணு விஷால் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கதாநாயகன்’. முருகானந்தம் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையப் போகும் நிலையில், விஷ்ணு விஷாலின் அடுத்த படம் எதுவும் இன்னும் ரிலீஸாகவில்லை.

‘ராட்சசன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜகஜால கில்லாடி’ என மூன்று படங்களைக் கைவசம் வைத்திருக்கும் விஷ்ணு விஷால், நான்காவதாக ஒரு புதிய படத்தை இன்று தொடங்கியிருக்கிறார். அவருடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் நான்காவது படத்தை, அவருடைய பெற்றோரின் திருமண நாளான இன்று தொடங்கியிருக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை, வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, பிரவீன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பின்னணிப் பாடகரும் நடிகருமான க்ரிஷ். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் வெயில் மாலையிலே...’ பாடலைப் பாடி பின்னணிப் பாடகராக அறிமுகமான இவர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, டி.இமான், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x