Published : 23 Jul 2018 06:26 PM
Last Updated : 23 Jul 2018 06:26 PM

சிவகார்த்திகேயன் படத்தில் ராதிகா, யோகிபாபு

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில், ராதிகா சரத்குமார் மற்றும் யோகிபாபு இருவரும் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீம ராஜா’ படம் செப்டம்பர் 13-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடிக்க, சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் மற்றும் யோகிபாபு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இந்தத் தகவலைப் புகைப்படத்துடன் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ராதிகா சரத்குமார். கடந்த மே 2-ம் தேதி பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ‘மன்னன்’ படப் பாணியில் இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிக்கும்போதே, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இது உருவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x