Published : 25 Jul 2018 11:02 AM
Last Updated : 25 Jul 2018 11:02 AM

விவசாய நிலங்களை அழிக்க நினைப்பவர்கள் ‘கடைக்குட்டி சிங்கம்’ பார்க்க வேண்டும்: சத்யராஜ்

விவசாய நிலத்தை அழித்து சாலை போட நினைப்பவர்கள் ‘கடைக்குட்டி சிங்கம்’ பார்க்க வேண்டும் என்று சத்யராஜ் பேசினார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மெளனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர்.

சூர்யா தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

''இந்நாட்டை என்ன என்னமோ செய்து முன்னேற்றப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலை கட்டலாம், சாலை போடலாம் என்று நினைப்பவர்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டும். மேலும், பணக்காரர்கள் சொகுசாக செல்ல, விவசாய நிலத்தை அழித்து சாலை போட யோசிக்கிறாங்களே அவங்களுக்கு தான் இப்படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும்.

இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் அனைவருக்குமே நடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி.''

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x