Published : 05 Jun 2018 10:01 AM
Last Updated : 05 Jun 2018 10:01 AM

சத்தியமங்கலத்தில் ‘எங் மங் சங்’

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகிவந்த ‘எங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பு சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது. ’மெர்க்குரி’, ’சார்லி சாப்ளின் 2’ படங்களை ஒப்பந்தம் செய்த நிலையில், ‘எங் மங் சங்’ படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தம் செய்திருந்தார். கும்பகோணம் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் பிரபுதேவா அடுத்தடுத்து ‘லஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘ஊமை விழிகள்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில் அந்தப் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததை அடுத்து சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ‘எங் மங் சங்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்த வார இறுதியுடன் முடிய உள்ள இப்படத்தில் தற்போது பிரபுதேவா, தங்கர் பச்சான், லட்சுமி மேனன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது பகுதிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x