Published : 02 May 2018 11:43 AM
Last Updated : 02 May 2018 11:43 AM

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், நடிகர் அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு நேற்று 47வது பிறந்த நாள். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சமூக சேவை நாளாகவும் கொண்டாடினர். #AjithBDayAsSocialServiceDay என்பது நேற்று ட்விட்டரில் ட்ரெண்டானது.

இந்நிலையில், தமிழகத்தின் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “நல்ல உடல்நலத்துடனும், சந்தோஷமாகவும், எதிர்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வெற்றிபெற வேண்டும் என்று பிறந்த நாளில் அஜித் குமாரை வாழ்த்துகிறேன். சினிமா வாழ்க்கையில் அவர் வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என #HappyBirthdayAjithKumar என்ற ஹேஷ்டேக்கோடு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x