Published : 21 May 2018 07:07 PM
Last Updated : 21 May 2018 07:07 PM

“என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்” - சிம்பு அதிரடி

‘என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்’ என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் சிம்பு.

‘எழுமின்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, “நான் பொதுவாக இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த விழாக்களுக்கும் போகமாட்டேன். விவேக் சார் இந்தப் படம் பற்றிக் கூறினார். சிறுவர்களை ஹீரோவாக்கி, அவர்கள் பின்னால் நின்று இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

விவேக் சார் ஒரு படத்தில் நடிக்கும்போது, ஒருவரை ஒரு சீனில் நடிக்கக் கேட்டேன். அவர் உடனே ‘சரி’ என்று சொன்னார். அப்படி அவர் சொல்லவில்லை என்றால், இன்று சந்தானம் என ஒருவர் வந்திருக்க முடியாது.

இந்தப் படத்தில் நடித்த பசங்க எல்லாரும், அவங்க அப்பா, அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லை என்றால், நீங்கள் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. நான், என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன். படிக்க, கற்றுக் கொள்ளத்தான் ஸ்கூலுக்கு அனுப்புகிறோம். ஆனால், யார் முதலில் பதில் சொல்கிறார்கள் என்றுதான் அங்கு பார்க்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். குழந்தைகளுக்கு என்ன வருமோ, அந்தத் திறமையை வளர்த்து விடுங்கள்” என்று அதிரடியாகப் பேசினார்.

வி.பி.விஜி இயக்கியுள்ள இந்தப் படம், தற்காப்புக்கலையின் அவசியம் பற்றிப் பேசுகிறது. விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“நிச்சயம் இந்தப் படத்தை என் மகளுக்குக் காண்பிப்பேன்” - கார்த்தி நெகிழ்ச்சி

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x