Published : 06 Apr 2018 03:34 PM
Last Updated : 06 Apr 2018 03:34 PM
‘இந்து டாக்கீஸ்’ நடத்திய கருத்துக் கணிப்பில், ‘காலா’ படத்தைவிட ‘2.O’ படத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அடுத்ததாக, ‘2.O’ படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களில், எந்தப் படத்துக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்? என ‘இந்து டாக்கீஸ்’ கருத்துக் கணிப்பு நடத்தியது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என இரண்டிலுமே இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. அதில், இரண்டிலுமே ‘2.O’ படத்துக்கு 52 சதவீதம் பேரும், ‘காலா’ படத்துக்கு 48 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இரண்டிலுமே ஒரே மாதிரியான வாக்கு சதவீதம் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT