Published : 03 Apr 2018 10:01 AM
Last Updated : 03 Apr 2018 10:01 AM

தென்னிந்திய அளவில் ஸ்ருதிஹாசன் முதலிடம்

அப்பா கமல்ஹாசனின் அரசியல் குறித்து பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்காத ஸ்ருதிஹாசன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இயங்கிவரும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். ஹிந்தி, தெலுங்கு,தமிழ் என்று நடிப்பில் கவனம் செலுத்தினாலும் பேஷன் வீக் இசை சார்ந்த நிகழ்ச்சிகள் என்று சர்வதேச அளவில் அதிக அளவில் கலந்துகொண்டு வருகிறார். டிவிட்டர் தளத்தில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தினை கடந்துள்ளது. ஸ்ருதிஹாசனுக்கு முன் டிவிட்டர் தளத்தில் இணைந்த பல முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய அளவில் முதல் நடிகையாக ஸ்ருதி தற்போது இந்த இடத்தை பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x