Published : 20 Apr 2018 08:59 AM
Last Updated : 20 Apr 2018 08:59 AM

பாடல் வடிவில் கதை

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து, அந்த நேரத் தில் ‘ஒரு கதை பாடட்டுமா சார்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

பாடல் வடிவில் தினம் ஒரு கதை, என்ற கருவில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் மண் வாசனை, மனிதர்களின் உணர்வு என்று சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த கதைகள் வருகின்றன. கிராமம், மீனவர்களின் வலி, கானா உலகம், வணிகம் இப்படி பல விஷயங்களை தொடுகிறது இந்த நிகழ்ச்சி. இதில், ‘எங்க போன ராசா’ என்ற முதல் கதையை, ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜவஹர் மித்ரன் இயக்கினார். தொடர்ந்து பல முக்கிய இயக்குநர்கள் இயக்க உள்ளனர். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் ஆலோசனையும், அவரது ‘டுபாடு’ நிறுவனம் சார்பில் பாடல் வரிகளின் பங்களிப்பும் இருக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x