Published : 28 Apr 2018 01:36 PM
Last Updated : 28 Apr 2018 01:36 PM

வடிவேலுவுடன் கூட்டணி வைக்கும் விமல்

வடிவேலு, விமல் கூட்டணியில் ஒரு காமெடிப் படம் தயாராக இருக்கிறது.

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கிய இந்தப் படத்தில், ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்தார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.

அதைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக ‘கன்னி ராசி’ படத்திலும், ஓவியா ஜோடியாக சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி 2’ படத்திலும் நடித்து வருகிறார் விமல். ‘மன்னர் வகையறா’ வெற்றியால், மறுபடியும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கிறார் விமல்.

அத்துடன், சுராஜ் இயக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில், விமலுடன் இணைந்து நடிக்கிறார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில், அர்ஜுன் - வடிவேலு கூட்டணியில் வெளியான ‘மருதமலை’ படம் காமெடி பிளாக்பஸ்டராக அமைந்தது. அதே பாணியில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், விமல் மற்றும் வடிவேலு இருவரும் போலீஸாக நடிக்கின்றனர்.

இதுதவிர, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ இயக்குநர் எழில், ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ‘தமிழன்’ இயக்குநர் மஜித் ஆகியோரின் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் விமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x