Published : 24 Apr 2024 04:46 PM
Last Updated : 24 Apr 2024 04:46 PM

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ முதல் சிங்கிள் மே 1-ல் ரிலீஸ்!

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா தி ரூல்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பையரிங்’ பாடல் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பையரிங்’ பாடல் வரும் மே 1-ம் தேதி காலை 11.07 க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரொமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘புஷ்பா..புஷ்பா..’ என்ற வார்த்தை மட்டும் திரும்ப திரும்ப ஒலிக்கிறது. பாடலை பாடியவர் குறித்த தகவலை படக்குழு வெளியிடவில்லை. புரொமோ வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x