Published : 11 Apr 2024 12:11 AM
Last Updated : 11 Apr 2024 12:11 AM

விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் மமிதா பைஜு?

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் ‘பிரேமலு’ நாயகி மமிதா பைஜுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது,

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளியான படம், ‘தி ஃபேமிலி ஸ்டார்’. இதில் கதாநாயகியாக மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தைக் கவுதம் இயக்குகிறார். விஜய் தேவரகொண்டாவின் 12 வது படமான இது ஸ்பை த்ரில்லர் கதையைக் கொண்டது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதில் நாயகியாக நடிக்க வைக்க, மமிதா பைஜு, ‘மிஸ்டர் பச்சன்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா பைஜு, தமிழில் ‘ரெபல்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x