Published : 10 Apr 2024 10:54 AM
Last Updated : 10 Apr 2024 10:54 AM

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் நடிகர் கார்த்தி!

சென்னை: ‘ஜப்பான்’ படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது லைன் அப்பில் இருக்கும் படங்களைப் பார்ப்போம்.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ எதிர்மறையான விமர்சனங்களால் பாக்ஸ் ஆஃபீஸில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர், ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்தார்.

இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜும், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வா வாத்தியாரே’ எனத் தலைப்பிட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. இது கார்த்தியின் 26வது படமாகும்.

அடுத்து ‘96’ பட புகழ் ப்ரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 27-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து கார்த்தி 28-வது படமாக ‘சர்தார் 2’, அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x