Published : 22 Mar 2024 12:42 AM
Last Updated : 22 Mar 2024 12:42 AM

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இணக்கமான ரொமான்ஸில் இருவரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தில் கமல் நடித்திருந்தார். கடனத் 2022-ல் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தனது அடுத்த படத்துக்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர் லிங்க்...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x