Published : 25 Feb 2018 11:06 AM
Last Updated : 25 Feb 2018 11:06 AM

ஒரு அழகான கதை மறைந்தது: ஸ்ரீதேவி மறைவுக்கு மோடி, ரஜினி, கமல் முதல் சச்சின், சந்திரபாபு நாயுடு வரை புகழாஞ்சலி

நடிகை ஸ்ரீதேவு மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 55. இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.

சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலமான்வர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி தன் ட்விட்டரில், “திரை உலகின் முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவினால் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். இவரது திரை வாழ்வில் நீண்ட நெடியது, பலதரப்பட்ட கதாபாத்திரங்களையும் மறக்க முடியாத நடிப்புத்திறனையும் கொண்டது. அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்: நடிகை ஸ்ரீதேவி மறைவு அதிர்ச்சியளிக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை இவரது மரணம் நொறுக்கிவிட்டது. மூன்றாம்பிறை, லாம்ஹே, இங்கிலிஷ் விங்கிலிஷ் ஆகிய படங்களில் இவரது நடிப்பு மற்ற நடிகர்களுக்கு அகத்தூண்டுதலாக அமைவது. ஆழ்ந்த இரங்கல்கள்.

ரஜினிகாந்த்: திரையுலகின் உண்மையான நண்பரை இழந்தேன். உண்மையான லெஜண்ட். நான் அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளேன். நான் என் உண்மையான தோழியை இழந்தேன், திரைத்துறை உண்மையான் லெஜண்டை இழந்துள்ளது. என் இதயம் அவரது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உள்ளது. அவர்களது சோகம் என் சோகம். ஆன்மா சாந்தியடையட்டும்.

கமல்ஹாசன்: ஸ்ரீதேவியை விடலைப்பருவம் முதல் அருமையான பெண்மணியாக வளரும் வரை பார்த்திருக்கிறேன். அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு அவர் தகுதியானவரே. கடந்த முறை அவரைச் சந்தித்தது முதல் அவரது நினைவுகள் என் உள்ளத்தில் பளிச்சிடுகின்றன. சத்மாவின் தாலாட்டு என்னை இப்போது ஆக்ரமித்துள்ளது, அவரை இழந்து விட்டோம்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்: வீ வில் மிஸ் யூ பப்பிக்கா, மிகவும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுத்துகிறது.

சந்திரபாபு நாயுடு: பன்மொழி நடிகை, தெலுங்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவரது ஈடு இணையற்ற நடிப்புத் திறமையினால் இந்தியாவின் பெருமைக்குரிய நடிகையாக அவர் திகழ்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம்: ஸ்ரீதேவி மறைவுக்காக வருந்துகிறோம். மிகமிகச் சிறந்த நடிகை. அவரது நடிப்புத்திறன் மூலம் நம் இதயங்களில் என்றென்றும் குடிகொண்டிருப்பவராக உள்ளார். அவரை நேசிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். யுபிஏ அரசு அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது.

சசிதரூர்: ஆஸ்திரிய மகாகவி ரைனர் மரியா ரில்காவின் கவிதையிலிருந்து மேற்கோள் காட்டியதன் தமிழ் வடிவம்: உன் பிரசன்னம் மணியின் சப்தம் போல் இரவில் ரீங்காரமிடட்டும், பூவுலகம் அறியாது உன்பெயரை, மவுன பூமிக்கு ரகசியக் குரலில் கூறு: நான் பாய்ந்து கொண்டிருக்கிறேன் என்று, ஒளிரும் நீருக்குச் சொல்: நான்தான் என்று, என ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதல்வர் ஓபிஎஸ்: நடிகை ஸ்ரீதேவியின் துரதிர்ஷ்டமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது வாழ்வும், உதாரணமாகத் திகழும் திரை வாழ்வும் பலதலைமுறைகளைக் கடந்து பலரையும் ஈர்த்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

சச்சின் டெண்டுல்கர்: நம்மிடையே ஸ்ரீதேவி இனி இல்லை என்பதை ஜீரணிக்கக் கடினமாக உள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு என் இதயம் கனிந்த இரங்கல்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x