Published : 11 Mar 2024 07:42 AM
Last Updated : 11 Mar 2024 07:42 AM

ஆஸ்கர் 2024 | சிறந்த நடிகர் சிலியன் மர்ஃபி @ ‘ஒப்பன்ஹெய்மர்’

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த சிலியன் மர்ஃபி வென்றார்.

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்‌ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த நடிகர் விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த சிலியன் மர்ஃபி, ’மேஸ்ட்ரோ’ படத்தில் நடித்த பிராட்லீ கூப்பர், ’ரஸ்டின்’ படத்தில் நடித்த கோல்மேன் டோமிங்கோ, ‘தி ஹோல்டோவர்ஸ்’ படத்தில் நடித்த பால் கியாமாட்டி மற்றும் ‘அமெரிக்கன் ஃபிக்‌ஷன்’ படத்தில் நடித்த ஜெஃப்ரி ரைட் ஆகியோர் பரிந்துரைப்பட்டிருந்தனர்.

இந்த பட்டியலில் தற்போது ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் நடித்த சிலியன் மர்ஃபி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x