Published : 07 Mar 2024 06:19 AM
Last Updated : 07 Mar 2024 06:19 AM

தமன்னா பட ஷூட்டிங்: ‘செட்’டில் ஜாமர் பொருத்திய படக்குழு

சென்னை: பிரபல இந்தி பட இயக்குநர் நீரஜ் பாண்டே. இவர் ‘எ வெட்னஸ்டே’, ‘ஸ்பெஷல் 26’, ‘எம்.எஸ்.தோனி’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பல படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். கதாநாயகன் முடிவாகவில்லை.

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. ஓடிடி தளம் ஒன்றுக்காகத் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ரகசியமாக நடத்தி வருகின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த தகவலும் வெளியே செல்லாமல் இருக்க, ஷூட்டிங் நடக்கும் அரங்கத்தில் ‘ஜாமர்’ கருவியை பொருத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து யாரும் தொலைபேசியில் படம் பற்றிய தகவலை வெளியே தெரிவிக்க முடியாது. செட்டில் இருந்து புகைப்படங்கள் எடுக்கவும் முடியாது. அதைத் தடுக்கவே இந்த ஏற்பாட்டை படக்குழுவினர் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x