Published : 07 Feb 2018 04:05 PM
Last Updated : 07 Feb 2018 04:05 PM

விஷ்ணு விஷாலின் புதிய படம்: ராஜசேகரின் மகள் நாயகியாக அறிமுகம்

விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஜசேகரின் மகள் ஷிவானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ராட்சஸன்', 'ஜெகஜால கில்லாடி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இப்படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை உறுதி செய்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

புதுமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இசையமைப்பாளராக க்ரிஷ் அறிமுகமாகவுள்ளார்.

இதன் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கவுள்ளார். இவர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகளாவார். பிரபுசாலமன் இயகக்த்தில் 'கும்கி' 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதிதி மேனன் 'கும்கி 2' நாயகியாக ஒப்பந்தமானார். இந்நிலையில் விஷ்ணு விஷால் படத்தின் மூலம் ஷிவானி தமிழில் அறிமுகம் ஆகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x