Published : 20 Feb 2024 10:14 AM
Last Updated : 20 Feb 2024 10:14 AM

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு - கோடையில் ரிலீஸ்

சென்னை: கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியல், நகைச்சுவை திரைப்படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘கிச்சா வயசு 16’ படங்களை இயக்கியுள்ளார்.

சசி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இதில் யோகி பாபு, ராஜேஸ்வரி, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x