Last Updated : 20 Feb, 2018 12:58 PM

 

Published : 20 Feb 2018 12:58 PM
Last Updated : 20 Feb 2018 12:58 PM

யு-டர்ன் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

பவண்குமார் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் 'யு-டர்ன்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'யு-டர்ன்' ரீமேக் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். காவல்துறை அதிகாரியாக ஆதி, காதலராக ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக மர்மமான முறையில் நடைபெற்று வரும் கொலைகளை துப்பறியும் பத்திரிகையாளராக சமந்தா நடித்து வருகிறார்.

'யு-டர்ன்' படத்தில் மேம்பாலம் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும். அதே போன்றதொரு மேம்பாலம் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடி வருகிறது படக்குழு.

கன்னடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளியான இருக்கும் 'யு-டர்ன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x