Published : 05 Feb 2024 01:03 PM
Last Updated : 05 Feb 2024 01:03 PM

ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர், கார்ல் வெதர்ஸ் காலமானார். அவருக்கு வயது 76. : 1976-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற படம், சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ‘ராக்கி’. இதில் அப்பல்லோ கிரீட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கார்ல் வெதர்ஸ். இந்தப் படத்தின் மூலம் அதிகம் பிரபலமடைந்த இவர், தொடர்ந்து ராக்கி வரிசை படங்களின் 4 பாகங்களிலும் நடித்தார். பிரிடேட்டர், ஆக்‌ஷன் ஜாக்சன், தி கம்பேக்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்த இவர், கடந்த 1ம் தேதி காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் மறைவுக்கு சில்வெஸ்டர் ஸ்டோலன் உட்பட ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x